என்னாச்சி! |
2013ம் ஆண்டில் இப்புடி எத்தனை விமர்சனங்கள் சந்தானத்தின் மீது! உண்மைலேயே சந்தானம் பீல்ட் அவுட் ஆயிட்டரா? அவருகிட்ட சரக்கு தீர்ந்துடுச்சா?ன்னு "அகாதுகா அப்பாடக்கர்ஸ்""ரியல் சந்தானம் ஃபேன்ஸ்"பிரபல பதிவர்களாகிய நமக்கே ஒரு டவுட்டு! அதுனால அது சம்பந்தமா ஒரு ஆண்டிறுதி போர்மாலிட்டி பதிவு.
சந்தானம் நடித்து 2013ல் வெளிவந்த படங்களின் சோர்டெட் லிஸ்ட்டு வித் மினி அனாலிசிஸ்!
- தீயா வேலை செய்யனும் குமாரு: படம் காமெடி ஹிட்டு, சந்தானம் காமெடி நல்லாவே இருந்துச்சு!
- கண்ணா லட்டு தின்ன ஆசையா: 2013ல் சந்தானம் நடித்து வெளிவந்த முதல் படம் மட்டுமல்ல, சந்தானம் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் கூட! பவர் ஸ்டார்+சந்தானம் அலம்பல்கள், இ.போ.நா.வா கதை,திரைகதை, மற்றும் சந்தானத்துக்கு அந்த டைம்ல இருந்த டிமாண்ட், அப்புறம் அது கூட வந்த மத்த படங்களுக்கு இதுவே மேல், போன்ற காரணிகளால் படம் ஹிட்டு!
- சிங்கம் 2:ஹரி படம்! ஹிட்டு! சந்தானம் காமெடி ஒன்னும் அவ்வளவு ஸ்பெஷல் கெடையாது! பட் ஓகே ரகம்!
- ராஜா ராணி: ஒட்டு மொத்த படமே சில சுவாரசிய காட்சிகளின் தொகுப்பு, காமெடியும் ஓகே!
- தலைவா: இந்த படம் நூறு நாள் ஒடுச்சாம், ஆனால், ஹிட்டா இல்லையானு தெரியல! நமக்கென்னமோ, இந்த படத்துல சந்தானம் காமெடிய விட இளைய தளபதி விஜய் பண்ண சீரியஸ்காமெடிக்கு செமையா சிரிப்பு வந்துச்சு!
- யா யா , தில்லு முல்லு, வணக்கம் சென்னை: சிவா+சந்தானம் கூட்டணி ஒன்னு சேர மாட்டார்களான்னு அவுங்க ரெண்டு பேருகிட்டையும் ஒவ்வொரு டிவி இண்டர்விவ்லயும் ஏதோ விஜய்+அஜித் ரேஞ்சில் கேட்கப்படும். கலகலப்பில் ஏற்கனவே இணைந்திருந்தாலும், இணைப்பு காட்சிகள் குறைவு! ஆனால், சேர்ந்தால் படம் எவ்வளவு மொக்கையா இருக்கும்னு இந்த படங்களே சாட்சி!
- சேட்டை: டெல்லி பெல்லியின் மிக மோசமான தமிழாக்கம்! ஒவ்வொரு காமெடிக்கும் சிரிப்பே வரல!
- பட்டத்து யானை:சாரி, இந்த படத்தை பார்க்கும் மனநிலையில் நாம இருக்கல! இதுவும் மொக்கையாம்!
- அலெக்ஸ் பாண்டியன்: சுராஜ் செம மொக்க டைரக்டர்! மாப்பிளை படத்துலயே செம மொக்க வாங்குனாரு! இந்த டைரக்டர்கிட்ட சரக்கே இல்லங்குறதுக்கு இந்த படமும் ஒரு சாட்சி! காமெடின்னு பார்த்தாலும் ஆபாசம் மட்டுமே!
- ஆல் இன் ஆல் அழகுராஜா: நாங்க இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை! ராஜேஷ் ஸார், உங்கள எவ்வளவு நம்பினோம் ஸார்! ஏன் ஸார்? ஏன்?
இது தொடர்பாக டீடெயில்ட் அனாலிசிஸ் பண்ணுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய சினிமா எக்ஸ்பெர்ட் அப்பாடக்கர் கெடையாதுன்னாலுமே, எனக்கு தெரிஞ்சு சந்தானத்தின் இந்த லெட் டவுனுக்கு என்ன காரணங்கள்ன்னு யோசிச்சு பார்த்தால்..
இப்போ சமீபத்துல ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் இவரு பீக்குக்கு வந்தாரு. பல கமர்சியல் டைரக்டர்களும் பிசினஸ்க்காக படத்தின் கதையில் எப்புடியாவது சந்தானத்தை நுழைச்சுறாங்க. நம்மாளும் இதுதான் டைம், இத விட்டா பிற்காலத்துல இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாதுன்னு, ஒரு நாளைக்கு பல லட்சங்கள்ன்னு கால்ஷீட் கொடுத்து ஒய்வில்லமா நடிச்சிகிட்டு இருக்காரு. அது போக, வர்ற பணத்துல பாதி பணம் கருப்பு பணம், ஐ.டி டிப்பார்ட்மென்ட் கொடுக்குற குடைச்சல்கள். இத ஏன், சொல்றேன்னா, மற்றைய நடிகர்களவிட காமெடி நடிகர்களுக்கு சொந்த சரக்கும் கிரியேட்டிவிட்டி மூளையும் ரொம்ப அவசியம். மனுஷன் பிஸியாவும், ஸ்ட்ரெஸ்ஸாவும் இருந்தா கிரியேட்டிவ்வா வேலை செய்ய முடியாது. பொதுவா ஒவ்வொரு காமெடி நடிகரும், எழுந்ததும் வீழ்ந்ததும் இந்த ஒரே காரணத்துனாலதான்.
எந்த ஒரு காமெடி நடிகருக்குமே லாங் லாஸ்டிங் பீக் டைம் இருந்தது கெடையாது. நம் அனுபவத்தில் நாம் பார்த்த, கவுண்டமணி+செந்தில் கூட்டணியின் வெற்றி, அதன் பின் கவுண்டர் தனித்து, செந்தில் தனித்து, வடிவேலுவின் ஆரம்ப கால கட்டங்கள், அப்புறம் மணிவண்ணனின் எழுச்சி, 2000ன் ஆரம்பகளில் விவேக் அலை அடித்து ஓய்ந்தது! அப்புறம் "வின்னர்", "கிரி"க்கப்புறம் வடிவேலுவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஒரு கட்டத்துக்கு பின் வடிவேலுவின் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்க்ஸ் நமக்கு போரடித்து கொண்டு வர ஆரம்பிக்கும் போதே, அவராவே வான்டட்டா தகறாரு பண்ணி பீல்ட் அவுட்! அதன் பின் இப்போ சந்தானம்!
![]() |
நீ பார்க்காத தோல்வியா, நீ பார்க்காதவெற்றியா? தல! |